search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் நிறுவன காவலாளி பலி"

    முருங்கப்பாக்கத்தில் சைக்கிளி மீது பஸ் மோதிய விபத்தில் தனியார் நிறுவன காவலாளி பலியானார்.

    புதுச்சேரி:

    புதுவை முருங்கப்பாக்கம் கணபதி நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது52). இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். நேற்று இரவு பணி முடிந்து சங்கர் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

    முதலியார்பேட்டை தனியார் போட்டோ ஸ்டூடியோ அருகே வந்த போது பின்னால் புதுவையில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது.

    இதில் தடுமாறி விழுந்த சங்கர் மீது பஸ்சின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. இவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே சங்கர் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதுவை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித், உதவி சப்-இன்ஸ்பெக்டர் வீரமுத்து ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பஸ் மோதி பலியான சங்கருக்கு புவனா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தவளக்குப்பம் அருகே சைக்கிள் மீது கார் மோதியதில் தனியார் நிறுவன காவலாளி பலியானார்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அருகே கொருக்குமேடு காந்திநகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது74). இவர் தவளக்குப்பம்- புதுவை மெயின்ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார்.

    நேற்று மதியம் இவர் மற்றொரு கம்பெனியில் காவலாளியாக வேலைபார்த்து வரும் நண்பரை பார்க்க சைக்கிளில் சென்றார்.

    சாலையை கடக்க முயன்ற போது புதுவையில் இருந்து கடலூர் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த பிரான்சிசை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரான்சிஸ் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மகன் அந்தோணி கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேட்ரிக் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×